05,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

மரபணு மாற்ற கொரோனா வைரஸ்களை அழிக்கும் கோவேக்சின்

கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவியதற்கு, இரட்டை மாறுபாடு கொண்ட வைரஸ் காரணமாக இருக்கலாம் என பல வல்லுநர்கள் நம்புகின்றனர்.

புதுடெல்லி:


இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த தடுப்பூசிகளின் செயல் திறன் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறுகின்றன.

அவ்வகையில், முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்பான கோவேக்சின் கொரோனா தடுப்பூசியானது, இந்தியாவில் கண்டறியப்பட்ட இரட்டை மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸ் உட்பட பல வகையான மரபணு மாறிய கொரோனாவுக்கு எதிராக நன்கு செயல்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட இரட்டை மாறுபாடு கொரோனா மட்டுமின்றி பிரிட்டன் மரபணு மாற்ற கொரோனா மற்றும் பிரேசில் மாறுபாடு வைரசையும், கோவேக்சின் அழித்திருப்பது ஆய்வில் தெரியவந்திருப்பதாக ஐசிஎம்ஆர் கூறி உள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவியதற்கு, இரட்டை மாறுபாடு கொண்ட வைரஸ் காரணமாக இருக்கலாம் என பல வல்லுநர்கள் நம்பும் நிலையில், இந்த வைரசை கோவேக்சின் தடுப்பூசி அழிப்பதாக ஆய்வு முடிவு கூறுகிறது. இது கொரோனா தடுப்பு நடவடிக்கையில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, தடுப்பூசி பற்றாக்குறையை போக்குவதற்காக, ஆண்டொன்றுக்கு 70 கோடி டோஸ் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய முடிவு செய்திருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் கூறி உள்ளது.




மரபணு மாற்ற கொரோனா வைரஸ்களை அழிக்கும் கோவேக்சின்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு