05,May 2024 (Sun)
  
CH
சினிமா

சனம் ஷெட்டியின் தொடையழகு புகைப்படத்துடன்.....

பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இந்த வருடம் ஜனவரி 17-ஆம் தேதி வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

இந்த ரியாலிட்டி ஷோவில் சனம் ஷெட்டி, அர்ச்சனா, அனிதா சம்பத், ஜித்தன் ரமேஷ், ஆரி, கேப்ரில்லா, ரம்யா பாண்டியன், சுசித்ரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஆஜித், சம்யுக்தா கார்த்திக், அறந்தாங்கி நிஷா, சோமசேகர், வேல் முருகன், ஷிவானி நாராயணன், பாலாஜி முருகதாஸ், ரேகா, ரியோ ராஜ் என 18 பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியின் Grand finale-வில் ரன்னர் அப்பாக பாலாஜியும், டைட்டில் வின்னராக ஆரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு இதில் பங்கேற்ற சில போட்டியாளர்கள் தினமும் தங்களது புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸை ஷேர் செய்த வண்ணமுள்ளனர்.

சிலர் அடுத்தடுத்து புது படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்கள். இதில் கலந்து கொண்ட நடிகை சனம் ஷெட்டிக்கு இப்போது மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. 35 வயதான சனம் ஷெட்டி ஏற்கனவே பார்த்திபனின் ‘அம்புலி’, நட்டியின் ‘கதம் கதம்’, பிரவீனின் ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், நடிகை சனம் ஷெட்டி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். படு கவர்ச்சியான காஸ்டியூமில் தொடை தரிசனம் வழங்கியிருக்கும் சனம் ஷெட்டியின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது.    




சனம் ஷெட்டியின் தொடையழகு புகைப்படத்துடன்.....

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு