05,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

மே மாதத்தில் கொரோனா உச்சம்..

சென்னை: கொரோனா பாதிக்கப்பட்டு லேசான அறிகுறி அல்லது அறிகுறி இல்லாத நபர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம். வீட்டிலேயே பாதுகாப்பாக தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகின்றன.


கொரோனா கட்டுப்பட்டதாக தெரியவில்லை நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சென்னையில் பல இடங்களில் கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்தும் சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தெரிவித்தார். நோய் பாதிப்பு அதிகரித்து சிலர் உயிரிழக்க நேரிடுவதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பாதிப்பை பொறுத்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் நாட்கள் மாற்றமடையும். ஒரு சிலர் 4 நாட்களில் டிஸ்சாரஜ் செய்யப்படலாம். சிலர் 10 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்றார்.


அதிகளவில் அறிகுறி இருப்பவர்கள் மட்டுமே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். லேசான அறிகுறி அல்லது அறிகுறி இல்லாத நபர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம். வீட்டிலேயே தனிமையில் இருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்...Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.





மே மாதத்தில் கொரோனா உச்சம்..

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு