13,May 2024 (Mon)
  
CH
சினிமா

விஜய் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே தற்பொழுது எங்கே

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக இந்தியாவில் தொற்றுக்களின் அளவு உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை அளவைக் கடந்திருப்பதுடன், உலகின் பல நாடுகளும் இந்தியாவை ஆபத்தான நாடாக அறிவித்துள்ளன.


இதனால், இந்திய விமானங்களுக்கு பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெருந்தொற்றில் சினிமா பிரபலங்களுக்கு பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விஜய் நடித்து வந்த அவருடைய 65-வது படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் ஜார்ஜியா செல்வதற்காக படக்குழு சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. அதற்கு விசா தூதரக அலுவலகத்தில் கோவிட் இல்லா சான்றிதழ் கோரப்பட்ட நிலையில் பூஜா ஹெக்டேவுக்கு பரிசோதனை செய்துள்ளனர். ஆனால், பரிசோதனை முடிவு பாசிட்டீவ் என்று வந்ததால் பூஜா ஹெக்டே ஜார்ஜியா செல்லமுடியவில்லை! இதனால் 22 நாட்கள் நீட்டித்துக்கொள்ளக் கூடிய விசாவானது 15 நாட்களுடன் முடிக்கப்பட்டு விஜய் சென்னை திரும்பிவிட்டார்.



தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறித்து தன்னுடைய சமூக வலைப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பூஜா: ‘எனக்கு கோவிட்௧9 தொற்று உறுதியாகியிருக்கிறது. வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்’என்று குறிப்பிட்டுள்ளார். பூஜா தற்போது விஜய் படம் தவிர, தெலுங்கில் 'மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர்', 'ராதே ஷ்யாம்', 'ஆச்சார்யா', ஆகிய படங்களில் நடித்துவந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.


இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




விஜய் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே தற்பொழுது எங்கே

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு