கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் முன்னணியாக திகழ்ந்து வருகிறது.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுகிறது. ஆக்ஸ்போர்டு- அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் இணைந்து தடுப்பூசி ஒன்றை உருவாக்கியது. இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து உலகம் முழுவதும் வினியோகம் செய்கிறது.
தற்போது தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சீரம் நிறுவனத்தின் தலைவரான ஆதார் பூனவல்லா ‘‘தடுப்பூசி சப்ளைக்கு அழுத்தம் அதிகமாக உள்ளது’’ என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் சீரம் நிறுவனம் தடுப்பூசி விலையை அதிகரித்திருந்தது. இதற்கு கடும் விமர்சனம் கிளம்ப இன்று 25 சதவீத விலையை குறைத்துள்ளது.
இந்த நிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத் தலைவர் ஆதார் பூனவல்லாவிற்கு ஓய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிஆர்பிஎஃப் அவருக்கு பாதுகாப்பு வழங்கும்.
0 Comments
No Comments Here ..