இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா இரண்டாவது அலையை ஒழிக்க, அந்நாட்டுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக, ஐ.நா பொதுச் செயலர் ஆன்டோனியோ கட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து உள்ள இந்த சோதனை மிகுந்த காலத்தில் இந்திய மக்களுக்கு ஆதரவாக, ஐ.நா. துணை நிற்கின்றது. இந்தியாவுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் அதிகரிக்க, ஐ.நா தயாராக உள்ளது என்று அவர் கூறினார். இதற்கு இந்தியாவுக்கான ஐ.நா நிரந்தர பிரதி நிதி திருமூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.
ஐ.நா பொதுச் சபையின் தலைவர் வோல்கன் பாஸ்கிர் கூறுகையில், அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி அளித்து உதவிய இந்தியாவில், தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருவது கவலை அளிக்கின்றது. இந்த நேரத்தில், அனைத்து நாடுகளும், இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் எனவும் கூறினார்.
0 Comments
No Comments Here ..