தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. தி.மு.க., கூட்டணி தான் அமோக வெற்றி பெற்றுள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குறித்து அக்கட்சி கொண்டிருந்த எண்ணங்கள் இனிமேலாவது மாறுமா; பா.ஜ., வெற்றி பெற்றிருந்தால் மட்டும் தான், ஓட்டுப்பதிவுஇயந்திரங்கள் தவறானவை என, சொல்வரா?
- நடிகை கஸ்துாரி சங்கர்
'தமிழகத்தில் ஜனநாயகத்தை யாராலும் அசைக்க முடியாது என்பதை உணர வைத்துள்ள தேர்தல் இது...' என, சொல்லத் தோன்றும் வகையில், நடிகை கஸ்துாரி சங்கர் அறிக்கை.
இந்த ஓட்டு எண்ணிக்கையில் நான் ஒன்றை கவனமாக பார்த்தேன். நாம் தமிழர் கட்சி, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறப் போவதில்லை. எனினும், அந்த கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் இளைஞர்கள், கட்டமைக்கப்பட்ட அரசியல் அமைப்புக்கு எதிராக அவர்கள் ஓட்டளித் துள்ளனர். அதை நாம் கவனிக்க வேண்டும்.
- காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்
'நீங்கள் சொல்வது உண்மை. சென்னையில் சீமான் செய்த பிரசாரங்களில், ஏராளமான இளைஞர்கள் சத்தம் போடாமல் கலந்து கொண்டனர். அவர்களின் ஓட்டு சீமானுக்கு விழுந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை... நேர்மறை எண்ணங்களை விட, எதிர்மறை எண்ணங்கள் மக்கள் மனதில், 'பசக்' என ஒட்டிக் கொள்ளும்... அது புரிந்து, காய் நகர்த்தினார் சீமான் என்பதன் முழு உதாரணம் இது...' என, சொல்லத் தோன்றும் வகையில், காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் அறிக்கை.
தி.மு.க., கூட்டணி வெற்றிமுகம், வெற்றியைக் கொண்டாடுவது என, வீதியில் திரளுவதைத் தவிர்க்க வேண்டும். சனாதனிகளைக் கொட்டமடிக்க விடாமல், தேர்தல் களத்தில் தடுத்ததைப் போல, கொரோனாவும் இங்கே கும்மியடிக்க இடம் கொடுத்து விடக்கூடாது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்
லடெச்ட் டமில் நெந்ச்
'சர்வ சதா நாழியும் சனாதனிகளை எண்ணி ஏங்கும் ஒரே நபர் நீங்கள் தான்... இப்படி தியானம் செய்வது தான் சனாதனத்தின் நோக்கம்... ஆகவே, நீங்கள் தான் உண்மையான சனாதனி...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.
மன்னர் காலங்களில் போர்களின் போது இறக்கும் ஆயிரக்கணக்கான வீரர்களைப் புதைக்க இடம் தேடி அலைந்ததாக, புத்தகங்களில் படித்துள்ளோம். அது போன்றதொரு நிலைமையை இப்போது, கொரோனா காலத்தில் நாம் பார்க்கிறோம்.
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன்
'உண்மை தான். ஏராளமான நிலங்களை வளைத்து போட்டுள்ள கட்சித் தலைவர்கள், தங்கள் நிலங்களை தானமாக வழங்கலாமே...' என, சொல்லத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் பேட்டி.
தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தெலுங்கானாவுக்கு கொடுக்கின்றனர். தமிழகத்திற்கு தேவைப்படும் ஆக்சிஜனை, கர்நாடகா மற்றும் ஒடிசாவிலிருந்து பெறுகின்றனர். இது, துக்ளக் தர்பார் போல இல்லை?
- காங்., முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம்
'மத்திய தொகுப்பு என்றால், அப்படித் தான் இருக்கும். இப்படித்தானே, நீங்கள் நிதியமைச்சராக இருக்கும் போதும், அதிக வரி தரும் மாநிலங்களின் நிதி, குறைந்த நிதி தரும் மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன...' என, சொல்லத் தோன்றும் வகையில், காங்., முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் அறிக்கை.
0 Comments
No Comments Here ..