26,Apr 2024 (Fri)
  
CH
இந்திய செய்தி

ஆவின் பால் விலை குறைப்பு நாளை முதல் அமல்

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த 7-ந்தேதி 5 கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் 2-வது அறிவிப்பாக ஆவின் பால் விலை குறைப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

ஆவின்பால் விலை குறைப்பு அறிவிப்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.

தமிழக அரசின் அறிவிப்பின்படி ஆவின் நீல நிறம் லிட்டருக்கு ரூ.40, அரை லிட்டர் ரூ.20-க்கும், ஆவின் பச்சை நிறம் அரை லிட்டர் ரூ.22-க்கும், ஆவின் ஆரஞ்சு அரை லிட்டர் ரூ.24-க்கும், ஆவின் இளஞ்சிவப்பு நிறம் அரை லிட்டர் ரூ.18.50-க்கும், நாளை முதல் விற்பனை செய்யப்படும். டீமேட் எனப்படும் பால் லிட்டருக்கு ரூ.57-க்கு விற்கப்படும்.

பால் அட்டை வைத்திருப்போருக்கு லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி அட்டைதாரர்களுக்கு ஆவின் நீல நிற பால் பாக்கெட் லிட்டருக்கு ரூ.37-க்கும், அரை லிட்டர் ரூ.18.50-க்கும் கிடைக்கும். பச்சை நிறமுள்ள அரை லிட்டர் பால் ரூ.21-க்கும், ஆரஞ்சு நிறம் ரூ.23-க்கும், இளஞ்சிவப்பு நிறம் ரூ.18-க்கும் கிடைக்கும் என்று ஆவின் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

தமிழக முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த 7-ந்தேதி 5 கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் 2-வது அறிவிப்பாக ஆவின் பால் விலை குறைப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

இந்த பால் விலை குறைப்பானது மே 16-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்தார். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆவின் பால் விலை குறைப்பு நடைமுறைக்கு வருகிறது.

தமிழகம் முழுவதும் ஆவின் பால் 25 லட்சம் லிட்டர்கள் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைப்பு காரணமாக ஆண்டுக்கு ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று ஆவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





ஆவின் பால் விலை குறைப்பு நாளை முதல் அமல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு