06,Apr 2025 (Sun)
  
CH
இந்திய செய்தி

தமிழகத்தில், கொரோனா சிகிச்சை பணிகளுக்கான கட்டளை அறைகளுக்கான உதவி எண்கள்

தமிழகத்தில், கொரோனா சிகிச்சை பணிகளுக்கான கட்டளை அறைகளுக்கான (WAR ROOM) உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் கட்டளை மையம் (War room) அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததை தொடர்ந்து, அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தாரேஷ் அகமது, கே.நந்தகுமார், உமா, வினித், கே.பி.கார்த்திகேயன், அழகுமீனா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு, படுக்கையின் எண்ணிக்கைகளை அறியலாம். இந்த நிலையில், கொரோனா கட்டளை அறைகளுக்கான உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மருந்து இருப்பு, படுக்கை வசதி,  ஒக்சிஜன் இருப்பு உள்ளிட்டவை குறித்து அனைத்து மாவட்டங்களையும் WAR ROOM ஒருங்கிணைக்கும் என கூறப்பட்டுள்ளது.

அரியலூர்- 1077, 04329-228709, வாட்ஸ் அப்- 9499933828 இல் தொடர்பு கொள்ளலாம். செங்கல்பட்டு- 044-27427412, 004-27427414 மற்றும் 1800-425-7088 & 1077 இல் தொடர்பு கொள்ளலாம். காஞ்சிபுரம்- 044-27237107, 044-27237207, மற்றும் கன்னியாகுமரி- 04652-220122, 04652-221077இல் தொடர்பு கொள்ளலாம் என்று 38 மாவட்டங்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





தமிழகத்தில், கொரோனா சிகிச்சை பணிகளுக்கான கட்டளை அறைகளுக்கான உதவி எண்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு