21,Mar 2026 (Sat)
  
CH
சினிமா

அசுரன் படத்திற்கு இந்தியில் அமோக வரவேற்பு

இந்தியில் கடந்த மார்ச் மாதம் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட அசுரன் படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில், கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அசுரன். தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் இரு தோற்றங்களில் நடித்திருந்தார். கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தனுஷ் நடித்த படங்களில் அதிக வசூல் சாதனை செய்த படம் என்ற பெயர் அசுரனுக்கு கிடைத்தது. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு 2 தேசிய விருதுகளும் கிடைத்தது.

அசுரன் படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அதேபோல் இந்தியில் கடந்த மார்ச் மாதம் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை இரண்டே மாதத்தில் 3 கோடிக்கும் அதிகமானோர் யூடியூபில் பார்த்துள்ளனர். அசுரன் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, தற்போது தனுஷின் கர்ணன் படமும் இந்தியில் டப் செய்து வெளியிடப்பட உள்ளதாம். 

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




அசுரன் படத்திற்கு இந்தியில் அமோக வரவேற்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு