10,May 2024 (Fri)
  
CH
விளையாட்டு

100 சிக்ஸர்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளேன்! எனக்கு ஒரு நியாயம் டோனிக்கு ஒரு நியாயமா? வெகுண்டெழுந்த பிரபல வீரர்

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவை பிரபல வீரரான ஷெல்டன் ஜாக்சன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஐபிஎல் 14ஆவது சீசனுக்காக நடத்தப்பட்ட மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அடிப்படை விலை 20 லட்சத்திற்கு ஏலம் போனார் சௌராஷ்டிரா வீரர் ஷெல்டன் ஜாக்சன்

.

ரஞ்சிக் கோப்பை தொடரின் கதாநாயகனாகவும் இவர் திகழ்கிறார். கடைசியாக நடைபெற்ற ரஞ்சிக் கோப்பையில் இவர் 100 சிக்ஸ்ர்கள் அடித்து சாதனை படைத்திருந்தார்.


இருப்பினும் இவர் குறித்து யாரும் பெரிய அளவில் பேசவில்லை. தொடர்ந்து இரண்டு வருடங்களாக அதிரடி காட்டி வரும் வரும் ஜாக்சனை அணித் தேர்வாளர்கள் கண்டுகொள்ளவில்லை.


பெரிய அளவில் ஊடக வெளிச்சமும் கிடைக்கவில்லை. மேலும் டோனி, சச்சின் டெண்டுலகர் போன்ற அனுபவ வீரர்கள் 35 வயதிற்கு மேல் முன்பைப் போல் சிறப்பாக விளையாட வில்லை என்றாலும் அணியில் தொடர்ந்து இடம்பெற்று வந்தனர்

.

ஆனால், 33 வயதில் அதிரடியாக விளையாடி வரும் ஜாக்சனுக்கு ஒரு போட்டியில் விளையாடக் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுதான் ஜாக்சனை கொந்தளிக்க வைத்துள்ளது.


இது குறித்து ஆதங்கத்துடன் ஷெல்டன் பேசுகையில், எனக்கு வயது 34. ஆனால், 22 வயது இளம் வீரர்களை விட நான் சிறப்பாக விளையாடி வருகிறேன்.

30 வயதுக்கு மேற்பட்ட புதுமுக வீரரை அணியில் சேர்க்க கூடாது என எந்த சட்டம் சொல்கிறது? அப்படியென்றால் முன்பைப் போல் அதிரடி காட்டாத மூத்த வீரர்களை 35 வயதுக்கு மேலும் ஏன் அணியில் வைத்திருக்கிறீர்கள்

.

இந்த விதிமுறை எனக்குப் புரியவில்லை. நான் கடந்த இரண்டு சீசன்களில் 900 ரன்கள் வரை அடித்துள்ளேன்.


அதுவும் கடந்த சீசனில் 100 சிக்ஸர்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளேன். இதைப்பற்றி ஏன் யாரும் பேச மறுக்கிறார்கள்? அணித் தேர்வாளர்கள் இதற்குமேல் என்ன தகுதி எதிர்பார்க்கிறார்கள் என கோபத்துடன் கேள்வியெழுப்பியிருக்கிறார்.





100 சிக்ஸர்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளேன்! எனக்கு ஒரு நியாயம் டோனிக்கு ஒரு நியாயமா? வெகுண்டெழுந்த பிரபல வீரர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு