நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், தமன்னா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினி தொடர்பான காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டார் நெல்சன்.
ஜூன் மாதம் முதல் வாரத்தில் டப்பிங் பணியை துவங்கவிருக்கிறார் ரஜினி. இந்நிலையில் தான் இன்ஸ்டாகிராமில் ஒரு சூப்பர் தகவல் வெளியிட்டுள்ளார் தமன்னா.
செட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பாடலுக்கு முன்பு அமைதி என தெரிவித்துள்ளார். ஜெயிலர் படத்தில் பிரமாண்டமான பாடல் காட்சி ஒன்று இருக்கிறதாம்
ஜெயிலர் படத்தை ஓகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஜூன் இரண்டாவது வாரத்தில் முதல் பாடலை வெளியிடுகிறார்களாம். இதையடுத்து ஜூலை மாதத்தில் இசை வெளியீட்டு விழாவை நடத்துகிறார்கள்.
சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கில் தான் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது. அந்த விழா மேடையில் ரஜினி பேசுவதை பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜெயிலர் படத்தில் நடித்து முடித்த கையோடு தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்க சென்றுவிட்டார் ரஜினிகாந்த். மும்பையில் ஒரு சண்டை காட்சியை படமாக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா. மும்பை படப்பிடிப்பின்போது ரஜினியும், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
ஜெயிலர் கூட்டணி மீண்டும் சேரப் போவதில் ரசிகர்களுக்கு சந்தோஷம் தான். ரஜினி தொடர்ந்து படங்களில் நடித்தாலே எங்களுக்கு போதும் என்கிறார்கள் ரசிகர்கள்.
0 Comments
No Comments Here ..