ஜெய்யுடன் காதல் முறிவு ஏற்பட்ட பிறகு யாரையும் காதலிக்காமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் அஞ்சலி, தனது வருங்கால கணவர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘ரிலேஷன்ஷிப் வாழ்க்கையில் மரியாதை என்பது மிகவும் முக்கியம்.
அதற்குப் பிறகுதான் அன்பு, காதல் எல்லாம். அப்படியொரு மரியாதை இல்லை என்றால், அந்த உறவே எனக்கு தேவையில்லை. அதுபோல், சினிமா கேரியரா? நல்லதொரு வாழ்க்கையா என்பதில் ஒன்றை தேர்வு செய்யும்படி கேட்டால், எனக்கு இரண்டுமே முக்கியம் என்று சொல்வேன்.
திருமணத்துக்குப் பிறகு ஆண்கள் வேலைக்குச் செல்வது போல் பெண்களாலும் செல்ல முடியும். சில நடிகைகள் திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு கூட படங்களில் நடிக்கின்றனர். பெண்களை மதிக்கும் ஒருவரையே திருமணம் செய்வேன். திருமணம் முடிந்த பிறகும் அவர் என்னை அதிக மரியாதையுடன் நடத்தும் நபராக இருக்க வேண்டும். முதலில் அப்படி ஒருவர் கிடைக்கட்டும்’ என்றார்.
0 Comments
No Comments Here ..