03,May 2024 (Fri)
  
CH
இந்திய செய்தி

மணிப்பூர் மாநிலத்தில் இரு குழுக்களுக்கிடையேயான போர் தொடர்ந்தும் நீடிப்பு

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி இன பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை கடந்த 45 தினங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்றது20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருந்தும் அங்கு அமைதி நிலவவில்லை. கலவரம் நீடித்து வருகிறது. 120-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 


இந்த நிலையில் மணிப்பூ ரில் மந்திரியின் வீடு மற்றும் பா.ஜனதா அலுவலகத்துக்கு மர்ம கும்பல் தீ வைத்தது. மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பொது சுகாதார பொறியியல் துறை, நுகர்வோர் மற்றும் உணவு விவகாரத் துறை மந்திரியாக இருப்பவர் சுசிந்த்ரோ. 

மைதேயி சமூகத்தை சேர்ந்த இவரது வீடு இம்பால் கிழக்கு பகுதியில் உள்ளது. இவருக்கு சொந்தமான குடோனை நேற்று இரவு மர்ம கும்பல் தீ வைத்து கொளுத்தியது. அதோடு அவரது வீட்டுக்குள் ஒரு கும்பல் நுழைந்து கட்டிடத்துக்கும் தீ வைத்தது. பாதுகாப்பு படையினர் அங்கு வந்த மர்மகும்பலை கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைத்தது. லேசாக எரிந்த தீயை அணைத்தனர். ஏற்கனவே பெண் மந்திரி வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டிருந்தது. 





மணிப்பூர் மாநிலத்தில் இரு குழுக்களுக்கிடையேயான போர் தொடர்ந்தும் நீடிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு