பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு, 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
இப்படத்திற்கு பிறகு சிம்பு, வேல்ஸ் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயரிக்கும் படத்தில் நடிக்கிறார். இதற்கு பிறகு சிம்புவின் 50வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளதாகவும் இதனை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்பட்டது.
தற்போதைய தகவல்ப்படி மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் அவரது 234 வது படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும், இந்த படமே சிம்புவுக்கு 50வது படம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிம்பு இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தனது 50வது படத்தில் சிம்பு வில்லனாக நடிக்கயிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன்பு சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..