இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடைபெற்றது. இதற்கான டொஸ்சுண்டப்பட்டது. டொஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால், முதலில் வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. இதில், முதலாவதாக முர்ஷிதா கதூன் மற்றும் ஷர்மின் அக்தர் களமிறங்கினர், ஆனால், ஷர்மின் அக்தர் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டானார். முர்ஷிதா கதூன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து, பர்கானா ஹக் 27 ரன்களும், நிகர் சுல்தானா 39 ரன்களும், ரித்து மோனி 8 ரன்களும், ரபேயா கான் 10 ரன்களும், நஹிடா அக்தர் 2 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். ஃபஹிமா கதூன் 12 ரன்களும், சுல்தானா கதூன் 16 ரன்களும், மருஃபா அக்தர் 6 ரன்களும் எடுத்தனர். ஷோர்னா அக்தர் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன்மூலம், வங்காளதேச அணி 43 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.
இதைதொடர்ந்து, வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. இதில் முதலில் களமிறங்கிய ஸ்மிரிதி மந்தனா 11 ரன்களும், பிரியா புனியா 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, ஹர்மன்ப்ரீத் கவுர் 5 ரன்களும், யாஸ்திகா பாட்டியா 15 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.
ஜெம்மியா ரோட்ரிகியுஸ் 10 ரன்கள், அமன்ஜோத் கவுர் 15 ரன்கள், தீப்தி சர்மா 20 ரன்கள், பூஜா வஸ்த்ரகர் 7 ரன்கள், பாரெட்டி அனுஷா 2 ரன்களும் எடுத்தனர். ஸ்னேஹ் ரானா ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தின் முடிவில், 35.5 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்து இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தனர். இதன்மூலம், 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மகளிர் அணியை வீழ்த்தி வங்காளதேச மகளிர் அணி வெற்றிப்பெற்றது.
0 Comments
No Comments Here ..