ஆந்திராவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இதையொட்டி ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் கடந்த 2 வாரமாக 'யாத்ரா' என்ற நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். நடை பயணத்தின் போது முதல்- மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை கடும் விமர்சனம் செய்தார்.
இதற்கு ரோஜா பதில் கூறுகையில், "பவன் கல்யாண் ஒரு நடிகர் என்பதால் அவரை பார்க்கத்தான் கூட்டம் வருகிறது. இதெல்லாம் ஓட்டாக மாறாது. பவன் கல்யாண் முதல்- மந்திரிக்கு பாடம் எடுப்பதை பார்க்கும் போது சன்னி லியோன் ஒழுக்கத்தை பற்றி வேதம் ஓதுவது போல் உள்ளது என்று பேசினார்.
இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இணையத்திலும் இதற்கு எதிர்ப்பு வலுத்தது. இந்தநிலையில் சன்னி லியோன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் ரோஜா பேசிய வீடியோவை வெளியிட்டு நான் ஆபாச நடிகைதான். ஆனால் எனது கடந்த காலத்தை நினைத்து ஒரு போதும் வருத்தப்பட்டதில்லை. உங்களை போல் இல்லாமல் நான் என்ன செய்ய விரும்பினாலும் அதை வெளிப்படையாகவே செய்வேன். ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை. உங்களுக்கும், எனக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் நான் ஆபாச பட உலகை விட்டு வெளியேறினேன். ஆனால் அதை நீங்கள் செய்யவில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.
0 Comments
No Comments Here ..