வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தின் 'ஃபர்ஸ்ட் ரோர்' கிளிம்ப்ஸ் வீடியோ, விஜய் பிறந்தநாளான ஜூன் 22 அன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. "என் நெஞ்சில் குடியிருக்கும்" என்ற தலைப்பில் வெளியான இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. காரணம், இந்தப் படம் நடிகர் விஜய் நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என்றும், அதன் பிறகு அவர் முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
'ஜன நாயகன்' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..