இதன் மூலம் 14 கிலோ எடையுள்ள, மானியம் இல்லாத இண்டேன் எரிவாயு சிலிண்டரின் விலை 881 ரூபாயாக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள், மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன.
கடந்த மாதம் 734 ரூபாயாக இருந்த மானியமில்லா சிலிண்டரின் விலை, இன்று முதல் 881 ரூபாயாக உயர்த்தப்படுவதாக Indane நிறுவனம் அறிவித்துள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய மெட்ரோ நகரங்களில் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டர் விலை 290 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும், 154 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,589 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
0 Comments
No Comments Here ..