இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில், இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வடகிழக்கு டெல்லியின் காவல்துறைத் துணை ஆணையாளருடன் அவசர சந்திப்பை நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது.
புதுடெல்லியில் வன்முறையை கட்டுப்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை, வடகிழக்கு டெல்லியின் முக்கிய பகுதிகளில் போராட்டங்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
0 Comments
No Comments Here ..