18,Dec 2024 (Wed)
  
CH
இந்திய செய்தி

எயார் இந்தியாவின் விற்பனை ஏலத்துக்கான விண்ணப்பங்களை அளிப்பதற்கான காலக்கெடு நீடிப்பு!

இந்திய அரசின் விமானச் சேவை நிறுவனமான எயார் இந்தியாவின் விற்பனை ஏலத்துக்கான விண்ணப்பங்களை அளிப்பதற்கான காலக்கெடு அடுத்த மாதம் 17 ஆம் திகதிவரை நீடிக்கப்படலாமென தெரிய வருகின்றது.

அந்த நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கான ஏலத்தின் காலக்கெடு, கடந்த 11 ஆம் திகதியிலிருந்து, அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை ஏற்கனவே நீடிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த காலக்கெடு மீண்டும் நீடிக்கப்படும் வாய்ப்புள்ளதாக புதுடெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டின் நிலவரப்படி எயார் இந்தியா நிறுவனம் 60,074 கோடி இந்திய ரூபாய் கடன் சுமையைக் கொண்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.




எயார் இந்தியாவின் விற்பனை ஏலத்துக்கான விண்ணப்பங்களை அளிப்பதற்கான காலக்கெடு நீடிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு