13,May 2024 (Mon)
  
CH
விளையாட்டு

சொந்த மண்ணில் மண்டியிட்டது தென்னாபிரிக்கா: தொடரை வென்றது அவுஸ்ரேலியா!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், அவுஸ்ரேலியா அணி 97 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் அவுஸ்ரேலியா அணி கைப்பற்றியது.

கேப் டவுண் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, டேவிட் வோர்னர் 57 ஓட்டங்களையும், ஆரோன் பின்ஞ் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில் கார்கிஸோ ரபாடா, என்ரிச் நோர்ஜே, லுங்கி ங்கிடி, டுவைன் பிரிடோரியஸ் மற்றும் டப்ரைஸ் சம்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 194 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி, 15.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், அவுஸ்ரேலியா அணி 97 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இதன்போது தென்னாபிரிக்கா அணி சார்பில், ராஸ்ஸி வெண்டர் டஸன் 24 ஓட்டங்களையும், ஹெய்ன்ரிச் கிளாசென் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியா அணியின் பந்துவீச்சில், மிட்செல் ஸ்டாக் மற்றும் அஸ்டன் அகர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஆடம் செம்பா 2 விக்கெட்டுகளையும், பெட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 2.3 ஓவர்கள் பந்துவீசி இரண்டு உதிரிகள் அடங்களாக 3 விக்கெட்டுகளை சாய்த்த மிட்செல் ஸ்டாக் தெரிவு செய்யப்பட்டார்.

இத்தொடரின் நாயகனாக, அனைத்து போட்டிகளிலும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிபடுத்தி ஆரோன் பின்ஞ் தெரிவு செய்யப்பட்டார்.






சொந்த மண்ணில் மண்டியிட்டது தென்னாபிரிக்கா: தொடரை வென்றது அவுஸ்ரேலியா!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு