10,May 2024 (Fri)
  
CH
இந்திய செய்தி

கொரோனா அச்சுறுத்தலால் குறைக்கப்பட்டது விமான சேவைக் கட்டணம்..!

சென்னை- டெல்லி இடையே ரூ.3,000 முதல் ரூ.3,500ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல்: குறைக்கப்பட்டது விமான சேவைக் கட்டணம்..!மாதிரிப்படம்

கொரேனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பயணிகள் வருகை குறைந்ததால், விமான நிறுவனங்கள் பயண கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

இதன் காரணமாக உள்நாட்டு பயணிகள் விமான கட்டணத்தின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் இருந்து பெங்களுருவுக்கு செல்ல 1000 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரையும், சென்னையில் இருந்து டெல்லிக்கு 3000 ரூபாய் முதல் 3,500 ரூபாய் வரையும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதே போல், சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு 1,200 ரூபாய் முதல் 1,400 ரூபாய் வரையும், சென்னையில் இருந்து மும்பைக்கு 2,100 ரூபாய் முதல் 2,200 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதனிடையே பெரும்பாலான விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்ய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது




கொரோனா அச்சுறுத்தலால் குறைக்கப்பட்டது விமான சேவைக் கட்டணம்..!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு