04,May 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

மருத்துவனையில் குவிய வேண்டாம்... - ராதாகிருஷ்ணன்


தமிழகம் சவாலான காலகட்டத்தில் உள்ளது. எனவே பொதுமக்கள் பதற்றமடைய கூடாது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மக்கள் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


தமிழகத்தில் கொரோனாவால் தினசரியும் 13 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,51,487 ஆக அதிகரித்துள்ளது. 9,43,044 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 95048 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 31,170 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்நிலையில் சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

கொரோனா சிகிச்சை மருந்து பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே ரெம்டெசிவர் மருந்துகளை வாங்கிப் போட்டுக் கொள்ளக்கூடாது. பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் ரெம்டெசிவர் மருந்து தேவைப்படுவதில்லை.


பரிசோதனை தேவை தமிழகம் சவாலான காலகட்டத்தில் உள்ளது. எனவே பொதுமக்கள் பதற்றமடைய கூடாது. ஆக்கப்பூர்வமாக சிந்தித்து அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். சென்னையில் 12 ஸ்கிரீனிங் சென்டர் உள்ளது. அங்கு பொதுமக்கள் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் காய்ச்சல் கண்காணிப்பு மையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


படுக்கைகள் தயார் தமிழகத்தில் புதிதாக 360 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கூடுதலாக 2,400 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். கோவிட் கவனிப்பு மையங்களில் 9,503 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்றும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


மருத்துவமனையில் வசதி தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் போதிய படுக்கை வசதிகள் உள்ளன. மக்கள் பதட்டம் அடைய வேண்டாம். அரசு மருத்துவமனைகளில் உள்ள வரம்பை தாண்டாமல் இருக்க பொது மக்கள் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.


தனி மனித இடைவெளி செவிலியர்கள், மருத்துவர்கள் கூடுதல் பணிசுமையுடன் பணியாற்றி வருகின்றனர். பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் தனி மனித இடைவெளியை கடைபிடித்து மாஸ்க் அணிந்து அவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்...Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.




மருத்துவனையில் குவிய வேண்டாம்... - ராதாகிருஷ்ணன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு