29,Apr 2024 (Mon)
  
CH
சினிமா

நடிகையும் நடிகருமான ஜீவிதா - ராஜசேகர் தம்பதியினருக்கு ஓர் ஆண்டு சிறைதண்டனை விதித்த நீதிமன்றம்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்தவர்கள் ராஜசேகர் மற்றும் ஜீவிதா தம்பதியினர். டாக்டர் ராஜசேகர் 'இதுதாண்டா போலீஸ்' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். ஜீவிதாவும் 'உறவை காத்த கிளி' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ஜீவிதா - ராஜசேகர் தம்பதியினருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து தீர்பளிக்கப்பட்டுள்ளது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

முன்னதாக தெலுங்கு ஸ்டார் சிரஞ்சீவி நடத்தி வரும் ரத்த வங்கியானது கள்ளச்சந்தையில் ரத்தம் விற்பனை செய்வதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தனர் ஜீவிதா - ராஜசேகர் தம்பதியினர். இது தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு சிரஞ்சீவியின் உறவினரும், நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் வழக்கு தொடர்ந்தார்.

அதன் மீதான விசாரணை முடிந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே போல் ஜீவிதா, ராஜசேகர் தம்பதியினர் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அபராதத் தொகையை கட்டிய அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் நடித்துள்ளார் ஜீவிதா. ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்கும் படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜீவிதா - ராஜசேகர் தம்பதியினருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.





நடிகையும் நடிகருமான ஜீவிதா - ராஜசேகர் தம்பதியினருக்கு ஓர் ஆண்டு சிறைதண்டனை விதித்த நீதிமன்றம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு